சிறுகதை

வரதட்சிணை மறுப்பு திருமணம் | கோவிந்தராம்

Spread the love

அரங்கத்தில் அனைவரும் வந்து அமர்ந்தனர்.

யாரோ ஒருவர் வருகைக்காகக் காத்திருக்கின்றனர்.

அவரும் வந்து சேர்ந்தபின் விழாத்தலைவர் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். அவர்களுக்கு மட்டுமே புரிந்த மொழியில் இறைவணக்கம் பாடிமுடித்த பின்னர் அனைவரும் சபை முறைப்படி மாலை மரியாதை பரிசுகள் வழங்கப்பட்டது.

தலைவர் பேச ஆரம்பித்தார் :–

நம்முடைய சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகள் எல்லாம் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே வருகின்றது. தேவையில்லாத அண்ணிய கலாச்சாரங்கள், சகவாசங்கள் எல்லாம் கூடிவர ஆரம்பித்திருக்கிறது. இதை உலக கலாச்சாரம் என்கிறார்கள். தலைமுறை இடைவெளி என்கிறார்கள். நவீன கலாச்சாரம் என்கிறார்கள் நாகரீகம் என்ற பெயரில் சிகை அலங்காரம், உடை அலங்காரமெல்லாம் முற்றிவிலும் மாறிவிட்டது.

இதையெல்லாம் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. உலக கலாச்சாரம் என்று சொல்லி ஆண்டாண்டு காலமாய் கடைபிடித்து வந்த உணவு முறை மாறிவிட்டது.

சைவம் என்று சொல்லி கொல்லாமையை வலியுறுத்தும் காய், கனி முதலானவைகளை சாப்பிட்ட காலம் போய் அச்சாரமான மாமிசங்கள் சாப்பிட ஆரம்பித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. விளக்கம் கேட்டால்

மருத்துவரின் ஆலோசனை பேரில் உடல்நலத்திற்காக சாப்பிடவேண்டிய கட்டாயம் என்று சொல்லி சப்பை கட்டு கட்டுகின்றனர்.

இப்படியே போனால் நம் கலாச்சாரம் அழிந்து போகும். அதைத் தடுத்து நிறுத்த நாம் அனைவரும் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

செயலாளர் தலைவரின் பேச்சை முடிக்கச் சொல்லி நாம் ஏன் இன்று கூடியிருக்கிறோம் என்பதைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

சமீபத்தில் நம் கலாச்சார குடும்பத்தில் இரண்டு திருமணங்கள் நம் வழக்கத்திற்கு மாறாக நடைபெற்றிருக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் .

மேலும் இது மாதிரியான திருமணங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும். மேலும் அந்த இரண்டு குடும்பத்தினையும் ஓதுக்கிவைக்க வேண்டும்.

ஊடகக்காரர் ஒருவர் செயலாளரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். இந்த மாதிரி புதிதாக நடக்கும் திருமணங்களுக்குக் காரணம் என்ன என்று சொல்ல முடியுமா என்று கேட்டார்.

கோபங் கொண்டவர் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் என்றார்.

உடனே ஊடக நண்பர் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். உங்களால் ஒப்புக் கொள்ள முடியுமா என்றார். ஒப்புக்கொள்ள எல்லாம் முடியாது சொல்லுங்க என்றார்.

ஆண்டாண்டு காலமாய் சாஸ்திரம், வேதம், உபநிஷத் படித்து உயர் திணையாய் வாழ்ந்து பழக்கப்பட்ட நீங்கள் ஆண் பிள்ளையை பெற்று விட்டால் ஏதோ ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர் போலவும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர் ஏதோ அஃறினை போலவும் பாவித்து பெண்ணை எடுக்கவேண்டும். வேண்டுமென்றால் கன்னிகாதானம் செய்து பெண்ணை கொடுப்பவர்களிடமே தானம் குடுத்த மாட்டை பல்லைப்சோதிப்பது போல அவர்களிடம் நீங்கள் எடுக்கும் அதிகாரம் பிச்சை என்னவெல்லாம் தெரியுமா என்றார்.

போதும் நிறுத்து இதற்குமேல் இது பற்றி பேச உனக்கு உரிமை இல்லை என்றார் செயலாளர்.

ஐயா எடுத்த செயலை பாதியில் நிறுத்த முடியாது. முழுவதும் சொல்லி முடிக்கிறேன் அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று பாக்கி காரணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

பிள்ளை பெற்றவர் எவ்வளவு வசதி படைத்தவராக இருந்தாலும் ஜாதகம் பொருத்தம் பார்த்து பெண்ணைப் பிடித்து விட்டால் அவர்கள் ஏழையாக இருந்தாலும் அவர்களிடம் நகைநட்டு, வெள்ளிப் பாத்திரங்கள் சீர்வரிசை, வரதட்சணை என்று அவர்கள் சக்திக்கு மீறி எதிர்பார்ப்பது என்ன நியாயம். பெண்வீட்டாரை அடிமைபோல் பார்ப்பது உங்கள் தர்மமா ? உங்கள் பந்துக்களுக்கு உறவுகளுக்கும் கோடித்துணி வாங்க பெண் வீட்டாரிடம் தானே பிச்சை எடுக்கிறீர்கள். திருமண மண்டப சாப்பாட்டு செலவுயாவும் கட்டுச்சாதம் மணப் பெண் வீட்டாரின் பிச்சை என்பதை என்றாவது நினைத்துப் பார்க்கிறீர்களா என்று பேசியதும் கோபப்பட்டார் செயலாளர்.

இதையெல்லாம் கேட்க உனக்கு யார் உரிமை தந்தது மரியாதையா வெளியே செல்லுன்னு விரட்டினார்.

இறுதியாக முறையில்லாமல் திருமணம் செய்தவர்களிடம் விளக்கம் கேட்டார். முதலானவர் பேசினார். நம் இனம், சமுதாயம், கலாச்சாரம் எல்லாம் எனக்கு நன்றாகத்தெரியும் . நானும் ஒரு மனிதன் தான் என்று யோசித்துத்தான் என் பெணணை அநதக்குடும்பத்து பையனுக்கு பாணிக்கிரணம் செய்து கொடுத்திருக்கிறேன்.

அவர்கள் குடும்பம் நாம் எப்படி ஆண்டவனை வழிபடுகிறோமோ அதைப் போல் பயபக்தியுடன் கும்பிடுகிறார்கள். நம்மைப் போல் வீரசைவர்களாகத் தான் உணவு உண்கிறார்கள். பெண்ணைத் தவிர எந்த ஒரு பொருளையும் பணத்தையும் எதிர்பார்க்கமால் திருமணம் செய்தார்கள். சுருக்கமாகச் சொன்னால் இது வரதட்சிணை மறுப்பு திருமணம் . நாங்களும் சந்தோசமாக பெண்ணை கொடுத்து மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றார்.

அடுத்த வரும் இதே மாதிரி பேசினார்.

எங்கள் சம்பந்தியும் ஒரு நேர்மையான எதற்கும் ஆசைப்படாதவர். என் பெண்ணுக்கு மகர் என்று சொல்லி ஒரு பெருந்தொகையைக் கொடுத்து பெண் எடுத்திருக்கிறார். எங்களை விட சுத்தமாகவும் உண்மையாகவும் பக்தி கொண்டவர். என் பெண் சந்தோசமாக வாழத்தான் இந்த சம்பந்தத்தை மனத்திருப்தியுடன் திருமணத்தை நடத்தி வவைத்தோம். மேலும் இது போன்ற செயலை நீங்கள் கண்டிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. மேலும் நீங்கள் எங்களை ஒதுக்கி வைத்ததை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி இருகுடும்பத்தினரும் மகிழ்ச்சியாக அரங்கத்தை விட்டு வெளியேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *