செய்திகள் போஸ்டர் செய்தி

ரூ.47 கோடி செலவில் தொழிற்பயிற்சி நிலையம், மகளிருக்கான விடுதிக் கட்டடம்: எடப்பாடி பழனிசாமி திறந்தார்

Spread the love

சென்னை, ஜூன்.14–
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (13–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 47 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்ளுக்கான விடுதிக் கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் மற்றும் பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குழந்தைகளும் இடைநிற்றல் இன்றி கல்விகற்று, சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடையவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், அவர்களுக்கு கட்டணமில்லாக் கல்வி, மதிய உணவு, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா கல்விஉபகரணங்கள் மற்றும் சீருடை, கல்வி ஊக்கத் தொகை வழங்குதல், தங்கிப் பயிலும் விடுதிகள் கட்டுதல் போன்ற எண்ணற்ற நலத் திட்டங்களை புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், விழுப்புரம் மாவட்டம் – மைலம், காஞ்சிபுரம் மாவட்டம் – ஓரிக்கை, திருவள்ளூர் மாவட்டம் – வடகரை, கே.ஜி. கண்டிகை மற்றும் சோழாவரம், சென்னை – சைதாப்பேட்டை, தேனிமாவட்டம் – பெரியகுளம், புதுக்கோட்டை மாவட்டம் – கீரமங்கலம், தருமபுரி மாவட்டம் – பாலக்கோடு, கடலூர் மாவட்டம் – குமராட்சி, ராமநாதபுரம் மாவட்டம் – அபிராமம், நீலகிரி மாவட்டம் – உதகமண்டலம்,
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர், கல்லூர் மற்றும் சேர்ந்தமரம், தூத்துக்குடி மாவட்டம் – பெரியசாமிபுரம், கோயம்புத்தூர் மாவட்டம் – ஆனைக்கட்டி, நாமக்கல் மாவட்டம் – வாழவந்திநாடு (கொல்லிமலை) ஆகிய இடங்களில் 21 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்ளுக்கான 19 விடுதிக் கட்டடங்கள்;
திருச்சியில்….
திருச்சி மாவட்டம், திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடம்; திருவள்ளூர் மாவட்டம், வடகரையில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம்; கடலூர் மாவட்டம் – சிதம்பரம் (நந்தனார்) மற்றும் தர்மநல்லூர், விருதுநகர்மாவட்டம் – சுந்தரராஜபுரம்,
திருவள்ளூர் மாவட்டம் – செவ்வாப்பேட்டை மற்றும் வடகரை, திருவாரூர் மாவட்டம் – அபிஷேககட்டளை, தஞ்சாவூர் மாவட்டம் – அகரப்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் – புளிச்சப்பள்ளம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் நலமேல்நிலைப் பள்ளிகள்; நாமக்கல் மாவட்டம் – முள்ளுக்குறிச்சி, ஈரோடு மாவட்டம் – பர்கூர், விழுப்புரம் மாவட்டம் – மணியார் பாளையம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிகள்;
தர்மபுரியில்…
தருமபுரி மாவட்டம் – எஸ். தாதம்பட்டி, திருவண்ணாமலைமாவட்டம் – பட்டறைக்காடு ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகள்; காஞ்சிபுரம் மாவட்டம் – பரமசிவம் நகரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலநடுநிலைப் பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம் – அகரப்பேட்டையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி;
நீலகிரி மாவட்டம் – எம்.பாலாடாவில் உள்ள அரசு பழங்குடியினர் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி, ஆகிய பள்ளிகளில் 21 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், சுற்றுச் சுவர், கழிப்பறைக் கட்டடங்கள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள்; என மொத்தம் 47 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணாக்கர்ளுக்கான விடுதிக் கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், தொழிற்பயிற்சிநிலையக் கட்டடம் மற்றும் பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
எம்.சி.சம்பத், ராஜலட்சுமி
இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைமுதன்மைச் செயலாளர் (முழு கூடுதல்பொறுப்பு) க. மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் க.வீ. முரளீதரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் டி. ரிட்டோசிரியாக், மற்றும் அரசுஉயர் அலுவலர்கள்கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *