செய்திகள்

ராணுவ வீரர் நினைவு தினத்தில் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் 9 பேர் பலி

சிகாகோ, மே 26

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது.

அங்கு கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 459 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அனைவரும் வீடுகளில் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனுடன், கடுமையான புயல்களும் அந்நாட்டை உருக்குலைத்து வருகிறது.

அமெரிக்காவில் ஒவ்வொரு வருட மே மாதத்தின் இறுதி திங்கட்கிழமை, ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த வீரர், வீராங்கனைகளை நினைவுகூரும் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் நினைவுதின விடுமுறையில் கூடி இருந்தவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2019ம் ஆண்டு இதேபோன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் பலியாகினர். 43 பேர் காயமடைந்தனர். 2016ம் ஆண்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 69 பேர் காயமடைந்தனர். இதேபோன்று 2015ம் ஆண்டில் பலி எண்ணிக்கை 12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *