மேட்டூர், மார்ச் 7–
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,224 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,373 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணைத்து வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,224 கன அடியிலிருந்து வினாடிக்கு 1,373 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு கூடுதலாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.52 அடியாக உள்ளது. நீர் இருப்பு 69.48 டி.எம்.சி.யாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.