வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள்அதிகமாக உடலுக்குக் கிடைக்கும். மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது.
சின்ன வெங்காயத்தின் மருத்துவ பயன்கள் வருமாறு:–
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியக் குறிப்புகளிலும் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது.
வெங்காயம் பயன்கள் – 4-5 வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும்; பித்த ஏப்பம் மறையும்.
வெங்காயத்தை நறுக்கி சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து அனைத்தையும் பாலுடன் சேர்த்து சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
வெங்காயத்தின் நெடி சில தலைவலிகளை குறைக்கும், வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பும் நீங்கும்.