செய்திகள் நாடும் நடப்பும்

மின்சார வாகனப் புரட்சிக்கு கவனம் செலுத்துவாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

கை ரிக்சாக்களை ஒழிந்து மூன்று சக்கர சைக்கிள் ரிக்சாக்களைக் கொண்டு வந்தார் கருணாநிதி!


ஆர். முத்துக்குமார்


இன்று மிக அதிக பயன்பாட்டில் இருக்கும் ஒன்று என்ற கேள்வியை எழுப்பினால் உடனடிப் பதில்களில் செல்போன், கார், கணினி என ஒரு பெரிய பட்டியல் நமக்கு கிடைக்கும். இவை எல்லாமே பேட்டரிகள் இன்றி செயல்படாது அல்லவா?

இந்த பேட்டரிகள் நம் சிறு வயது முதலே நாம் கையாளும் ஒரு கருவி என்றாலும் அதன் பயன்பாட்டைத் தாண்டி நாம் அதிகம் கவனம் செலுத்தியது கிடையாது.

பேட்டரிகள் 2 வகையாக உபயோகத்தில் இருக்கிறது. ஒரு முறை பயன்பாட்டில் இருக்கும் பேட்டரிகள் அதில் உள்ள ரசாயனத்தின் வீரியம் குறைந்து விட பேட்டரியில் மின்சாரம் குறைந்து பேட்டரியை பயன்படுத்த முடியாமல் தூக்கி எறிந்தாக வேண்டிய நிலை உருவாகி விடும்.

பேட்டரி பயன்பாடு

இதற்கு எடுத்துக்காட்டாக பட்டன் செல்கள், டார்ச் லைட் பேட்டரிகள், ரிமோட் பேட்டரிகள் என்பன தினமும் பல கோடி பேட்டரிகள் குப்பையில் உலகெங்கும் தூக்கி எறியப்படுகிறது.

அடுத்த வகையானது, ரீச்சார்ஜ்ஜபிள் பேட்டரிகள். முன்பு காந்தத்தின் தத்துவத்தில் மின்சாரத் தயாரிப்பு இருந்தது. அதாவது டைனமோ இதில் காந்தத்தை சுழல விட்டு அந்த சுழற்சியில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது.

பழங்கால சைக்கிள்களில் இருந்தது உண்மையில் இந்த டைனமோ பேட்டரிகள் கிடையாது. அது பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் மின்உற்பத்தி முறையாகும்.

தற்போது மிக அதிகமாக உபயோகத்தில் இருப்பது சார்ஜ் ஏற்றப்பட்டு, மீண்டும் மீண்டும் உபயோகிக்கப்படும் பேட்டரிகள் ஆகும். அவை செல்போன், லேப்டாப், இயர் போன்கள் புதுப்புது நவீன அறிவியல் சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பேட்டரிக் குப்பைகள்

மீண்டும் சார்ஜ் ஏற்ற முடியாத பேட்டரிகள், ஆண்டுக்கு ஆண்டு குறைந்தது 20 பில்லியன் அளவுக்கு தூக்கி எறியப்படுகிறது. அதேபோல் மீண்டும் சார்ஜ் ஏற்றக் கூடிய பல கோடி பேட்டரிகளும் ஆண்டுக்கு ஆண்டு குப்பைக்குப் போகிறது.

பல ஐரோப்பிய நாடுகளில் பேட்டரிகளின் தரம் நிர்ணயிக்கப்பட்டு குறைந்தபட்ச தரநிலை வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அப்படி தர நிர்ணயத்திற்குள் இல்லாத தயாரிப்புகள், வளரும் பொருளாதார நாடுகளில் மலிவு விலையில் விற்பனைக்கு சென்று விடும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இனிவரும் காலத்தில் கிட்டத்தட்ட எல்லா கருவிகளும் சார்ஜ் ஏற்றிக்கொண்டு மீண்டும் மீண்டும் உபயோகிக்கப் படும் திறன் கொண்டவையாக தான் இருக்கப் போகிறது. நம் பொறியியல் மாணவர்களும் மாநில அரசுகளும் இத்துறை மீது விசேஷ கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.

நம் சாலைகளில் மின்சார வாகனங்கள் அதிகமாகி வருகிறது. கரும்புகை கக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் நம்மிடமிருந்து விரைவில் விடைபெற நமது விஞ்ஞானிகள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதை அறிவோம். தமிழ்நாடும் இத்துறையில் பின்தங்கி விடக்கூடாது. மின்சார இரு சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறோம் என்றாலும் சாலைகளில் கரும்புகை கக்கும் எந்த வாகனமும் இனிக் கிடையாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

சைக்கிள் ரிக்சா அறிமுகம்

இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நல்ல முன் உதாரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்! 1960 க்களில் தமிழ்நாட்டின் அதிமுக்கிய சாலை போக்குவரத்தே மனிதனை உட்கார வைத்து மனிதன் இழுத்துச் செல்லும் ‘கை ரிக்சாக்கள்’ தான். தார் சாலைகளில் கூட கோடை வெயிலிலும் மழைக் காலங்களிலும் ஏழைத் தொழிலாளர்கள் ‘கை ரிக்சாக்களை’ இழுத்துத் தான் சம்பாதித்து வந்தனர்.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 1973 ஆம் ஆண்டு ஜூன் 3 இல் இந்த கை ரிக்சாக்கள் அனைத்தையும் ஒழித்துக் கட்டிட ஆணை பிறப்பித்தார். அதை வைத்து இருந்தவர்களுக்கு உரிய இழப்பீடாக மூன்று சக்கர சைக்கிள் ரிக்சாக்களை

இலவசமாகத் தந்து உதவினார்.

என்ன செய்வார் ஸ்டாலின்?

அன்று சைக்கிள் ரிக்சாக்களுக்கு மாறியது போல் வரும் காலத்தில் நவீன பேட்டரிகள் கொண்டும் உபயோகத்திற்கு வர ஏதுவாக வாகனத் துறையில் புரட்சிகர மாற்றங்கள் வர வேண்டும். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார் என்பதை காலம் தான் பதிலாகச் சொல்லும்.

பல நாடுகள் 2030 க்குப் பிறகு குறைந்தபட்சம் பாதிக்கு பாதி பசுமை மய மின்சார வாகனங்களை உபயோகத்திற்கு கொண்டு வரத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வளர்ச்சிகளை மனதில் கொண்டு நவீன பேட்டரிகள் வடிவமைப்பதில் சீனா முன்னணியில் இருக்கிறது.

அடுத்த தலைமுறைக் கருவிகளுக்கு தேவைப்படும் காந்தங்களை தயாரிப்பதில் சீனாவுக்கு நிகராக அமெரிக்கா தயாராகி விட்டது. பாரம்பரியமாகவே பிரேசில் போன்ற நாடுகள் மின்காந்த ரிக்சா தயாரிப்பில் முன்னணியில் இருக்கிறார்கள்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் உலகத் தேவையில் சீனா 55 சதவீதம் மின்காந்த ரிக்சாக்களை தயாரிக்கும் நாடாக உயர்ந்துவிட்டது. அதே வேகத்தில் நாமும் மின்சார பேட்டரிகள் தயாரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவசரமும் அவசியமுமான ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published.