செய்திகள்

மான்கறி சமைத்து சாப்பிட்ட 4 பேருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

ஈரோடு, ஆக.1–-

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் வனப்பகுதியில் மான் கறி சமைத்து சாப்பிட்ட 4 பேருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுஜ்ஜல் குட்டை பகுதியில் சிலர் மான் கறி சமைத்து சாப்பிடுவதாக கிடைத்த தகவலை அடுத்து வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்றனர்.

நாய் வேட்டையாடிய போது, உயிரிழந்த புள்ளிமானின் கறியை எடுத்து சமைத்துச் சாப்பிட்ட சுஜ்ஜல்குட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமர் (வயது 35), அருள்குமார் (வயது 18), திருப்பூர் மாவட்டம் அவிநாசி சேவூரைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (வயது 20), தாளவாடி சூசைபுரத்தை சேர்ந்த சார்லஸ் (வயது 38) ஆகிய 4 பேரை வனத்துறையினர் பிடித்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லால் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 4 பேருக்கும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *