சிறுகதை

மறுமலர்ச்சி |சீர்காழி . ஆர். சீதாராமன்

” கடவாசல் பக்கத்துல ஒரு சின்ன கிராமம் இஞ்சிச்குடி . ஊருல நிறைய கஷ்டங்கள் , வியாதிகள் , நிறைய சாவுகள் காரணம் புரியாமல் தடுமாறினார்கள் கிராம மக்கள் .

” அந்தக் கிராமத்தில் ஒரு மாரியம்மன் கோவில் , கும்பாபிஷேகம் நடந்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது .

சிதிலமடைந்த கோவில், பூசாரி ; பூஜை மட்டும் உண்டு .பெரிய அளவுல விழா புறப்பாடு கொண்டாட்டம் எதுவும் கிடையாது .

மாரிமுத்து கிராமத் தலைவர். அவரும் இன்னும் பல பெரியவர்கள் கூடி ஊர் பிரச்சனைக்கு காரணம் என்ன என்று பல முறை விவாதித்தனர் .

ஒரு பெரியவர் சொன்னார் : எங்க அப்பா காலத்துல இந்த கிராமத்து மாரியாத்தா கோவிலில் திருவிழா கொண்டாட்டம் தட புடலா இருக்கும்; தீமிதி ; கூழ் விழான்னு களைகட்டும்; பெரியவங்க தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு சொல்றேன்…..”

” சொல்லுங்க ஐயா என்றார்கள் .

பெரியவர் தொடர்ந்தார்:–

கிராம பிரச்சனைக்கு ஆத்தா கோபம் கூட காரணமா இருக்கலாம். சீக்கிரம் கோவிலை சீர்படுத்தி கும்பாபிஷேகம் செஞ்சா எல்லாம் சரியா போயிடும்’’ என்றார் .

கூட்டத்தில் அவர் யோசனை ஏற்றுக் கொள்ளபட்டது.

முந்நூறு வீடு , வீட்டுக்கு ஐயாயிரம் கோவில் வரின்னு பஞ்சாயத்துல முடிவு எடுக்கப்பட்டது .

பழைய கிராமத்துகாரங்கள் , தெரிந்தவர்கள் , வியாபாரம் செய்ய வந்தவர்கள் என்று பணம் சேர்த்தனர். ஒரு நல்ல நாளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது .

அடுத்த மாதம் முதல் பவுர்ணமி பூஜை , தீமதி , கூழ் விழா , புறப்பாடு என கிராமமே களைகட்ட தொடங்கியது .

கொஞ்சம் கொஞ்சமாக சாவுகள் , வியாதிகள் , கஷ்டங்கள் குறைந்தது கிராம வாழ்வாதாரம் பெருகியது .

பணம் காசு மக்கள் கையில் புரள புதிய கடைகள் வியாபாரங்கள் தொடங்கியது .

மூட நம்பிக்கை என்று பகுத்தறிவு சொன்னாலும் நடை முறை வாழ்க்கை நலம் பெறத் தொடங்கியது அந்த கிராமத்தில் .

மக்களுக்குப் பசி பட்டினி சில வீடுகளில் இருந்தாலும் மனத்தூய்மை , குணத்தூய்மைஇருந்தது; குற்றங்களே நிகழாமல் இருந்தது. ஆத்தாளுக்கு குறை வைப்பதில்லை கிராம மக்கள் .

தெய்வம் இருக்கு என்பது மட்டும் புரிந்த விசயமாக மாறியது.

அந்த இஞ்சிக்குடி கிராமத்து மக்களிடையே துயரங்கள் தொடரவில்லை இன்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *