செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: 110 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஹாமில்டன், மார்ச் 22–

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 110 ரன் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை இந்தியா வீழ்த்தியது.

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தனா – ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடினர். ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுத்த நிலையிலும் ஸ்ம்ரிதி மந்தனா 30 ரன்களிலும் வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய யாஷிகா பாட்டியா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசையில் ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 230 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கவுள்ளது. தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வந்தாளதேச அணியினர் 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதைத் தொடர்ந்து 110 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய பந்து வீச்சு வீராங்கனை ரானா அதிகபட்சமாக 4 விக்கெட் எடுத்தார். பூஜா, கோசுவாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், பூனம், ராஜேஸ்வரி தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.