செய்திகள்

போரூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகளுக்கு மின்விசிறி தண்ணீர் தொட்டி முன்னாள் மாணவர்கள் வழங்கினர்

சென்னை ஜூலை 19

போரூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பள்ளி வகுப்பறைக்குத் தேவையான 30 மின்விசிறிகள், தண்ணீர் தொட்டி ஆகியவை வழங்கினர். பள்ளி சுற்றுச் சுவர்களில் கண்கவர் வண்ணங்களில் எழில்மிகு இயற்கை காட்சிகளை ஓவியங்களாக தீட்டி உள்ளனர். 9 முதல் 12ம் வகுப்பு வரை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னணி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பரிசு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியை திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரியும் போரூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான மனோகர் துவக்கி வைத்துப் பேசினார். முன்னாள் மாணவர்கள் சரவணன், செங்குட்டுவன், சதீஷ்குமார் ஆகியோர் முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி, தலைமையாசிரியர் வீரபாண்டியன், ஜானகி, ஆசிரியர்கள் மாதவன் உட்பட முன்னாள் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசினர்.

இதில் 1992–-1996ம் ஆண்டு படித்த 75க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி நண்பர்களை கண்டு பரவசமடைந்தனர். அவர்கள் தங்கள் பள்ளி ஆசிரியர்களை வெகுவாக பாராட்டிப் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *