போஸ்டர் செய்தி

பொள்­ளாச்சி பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கு சி.பி.ஐ.க்கு மாற்­றம்: தமி­ழக அரசு அர­சா­ணை

சென்னை, மார்ச் 14–

பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவியிடம் முகநூல் மூலம் பழகி, பாலியல் தொல்லை தந்து அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி பணம் பறித்ததாக பாதிக்கப்பட்ட ஒரு பெண், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு (வயது 27), அவருடைய நண்பர்கள் என்ஜினீயர் சபரிராஜன் (27), சதீஷ் (27) மற்றும் வசந்தகுமார் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரையும் மாவட்ட கலெக்டர் ராசாமணி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் குண்டர் சட்­டத்­தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய எதிரியாகக் கூறப்படும் திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கேட்டு அவரது தாயார் லதா, பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மனுவை விசாரித்த பொள்ளாச்சி ஜே.எம்.1 நீதிமன்ற மாஜிஸ்திரேட், திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

சிபி­சி­ஐடி விசா­ர­ணை

இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக காவல்துறை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து ஐ.ஜி. ஸ்ரீதர், பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோரது தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவில் கோவை வந்தனர். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போலீசாரிடம் வழக்கு குறித்து விசாரித்தனர். பின்னர் அவர் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனிடம் இந்த வழக்கு குறித்த விவரத்தை கேட்டறிந்தார்.

பின்னர் நேற்று மாலையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் மற்றும் போலீசார் ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த வீடு முழுவதும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரிகள் தலைமையில் மற்றொரு பிரிவினர் மாக்கினாம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் ஆய்வு செய்தனர். அங்குசில ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி அரசாணை வெளியிட்டு உள்ளது. தாமாக முன்வந்து விசாரிக்க

உயர் நீதிமன்றம் மறுப்பு

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் சிலர், தலைமை நீதிபதி தஹில் ரமனி, நீதிபதி துரைசாமி அமர்வின் முன்பு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும், உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும், இது­சம்­பந்­த­மாக தமிழக அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என முறையிட்டனர்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறி கோரிக்கையை நிராகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *