“போதைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க மோப்ப நாய்களுக்கு பதிலாக நானோ அறிவியலால் ஆன ‘எலக்டிரானிக் மூக்கு மற்றும் எலக்டிரானிக் நாக்கு’ ஆகிய புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்டன,”
‘நானோ பொருட்களின் பன்முக செயல்பாடு’ பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகமும் (டி.ஆர்.டி.ஓ), நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இன்று இயற்கைதான் அனைத்து ‘நானோ’ விஞ்ஞானிகள், தொழில் நுட்ப நிபுணர்களை ஊக்குவிக்கும் சக்தியாக உள்ளது. இதனால் உலகம் முழுவதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தொழில் நுட்பங்களை தயாரிப்பவர்கள், இன்று இயற்கையில் இருந்து கற்கத் துவங்கியுள்ளனர். நானோ தொழில் நுட்பத்தால் ஆன நுண்ணிய பொருட்கள், இன்று பொறியியல் மற்றும் சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு அளிக்கின்றன. குறிப்பாக புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுகிறது.
போதை வஸ்து கடத்தல், விஷ வேதி வாயுக்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்களை நம்பியுள்ளோம். எளிதாக இவற்றை நுகர்ந்து கண்டுபிடிக்க எலக்டிரானிக் மூக்கு மற்றும் எலக்டிரானிக் நாக்கு ஆகிய தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. ஜூஸ், பால் போன்ற திரவங்களை வேறுபடுத்தவும் அதில் உள்ள நச்சுக்களை கண்டறியவும் இத்தொழில் நுட்பங்கள் உதவுகின்றன.