சிறுகதை

பேச்சிலர் ஒன்லி – ராஜா செல்லமுத்து

கோதண்டத்திற்கு சென்னையில் ஐந்தாறு வீடுகள் இருந்தன. அத்தனை வீடுகளையும் வாடகைக்கு விட்டிருந்தார்.

கிராமத்தில் இருந்து வரும்போது திருட்டு ரயில் ஏறி வந்ததாக கதைகள் அளந்து விடுவார். கஷ்டப்பட்டு மூட்டை தூக்கி வியர்வை சிந்தி இந்த வீடுகளை வாங்கியதாக அவர் சொல்லாத ஆட்கள் பாக்கி கிடையாது. அத்தனையும் தன் உழைப்பால் வாங்கியது என்று எல்லோரிடமும் சொல்லும் பழக்கம் உடையவர்.

வாடகைக்கு விடும் வீடுகள் அத்தனையிலும் பேமிலி தவிர வேற யாருக்கும் விடுவதில்லை என்று கங்கணம் கட்டி அலைந்து கொண்டிருந்தார் கோதண்டம் .

ஏனென்றால் குடும்பமாக இருந்தால் பிரச்சனைகள் வராது. சண்டை சச்சரவு இருக்காது .அதோடு மங்களகரமாக இருக்கும் என்று கோதண்டம் நினைத்ததில் தவறில்லை.

நடந்தது வேறு;

தண்ணீர் போட்டு தொட்டியில் தேக்கி வைத்தால் ஐந்து நிமிடத்திற்குள் அத்தனையும் காலி ஆகிவிடும் . திரும்பவும் போட வேண்டும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள் ஆக இருந்தால் பரவாயில்லை. கணவன் வேலைக்கு சென்று மனைவி வீட்டில் இருந்தால் துவைப்பது பாத்திரம் துலக்குவது என்று தண்ணீரைக் காலி பண்ணி விடுவார்கள்

அதோடு சொந்த பந்தங்கள் என்று பத்து பதினைந்து பேர் வந்து வீட்டில் அமர்ந்து கொண்டு கொட்டமடிப்பார்கள்

இப்படி அவர் வாடகைக்கு விட்டு இருக்கும் வீடுகளில் எல்லாம் குடும்பம் குடும்பமாக வந்து தண்ணீரைக் காலி செய்வதும் செப்டிக் டேங்க் நிறைப்பதுமாக இருந்தார்கள். கோதண்டம் அலுத்துக் கொண்டார்.

ஏங்க நான் சொன்னேன்ல குடும்பங்கள வைக்கிறது பெரிய பிரச்சனை. நம்ம எதுவும் சொல்ல முடியாது. சொந்த பந்தம் வருவாங்க போவாங்க ; ஆனா இந்த பேச்சுலர்களை வச்சம்ன்மா எந்த பிரச்சினை இருக்காது. காலைல போனா நைட்டு தான் வருவானுங்க. அது மட்டும் இல்ல. அவனுக்கு தேடி யாரும் வரவும் மாட்டாங்க. சமைக்க கூட மாட்டானுக. துவைக்கிறதும் அவனுடைய டிரஸ் தான். தண்ணியும் மிச்சம். செப்டிக் டேங்க் நிறையாது. வர்ற பசங்க கிட்ட சொந்த பந்தம்னு யாரும் வரக்கூடாதுன்னு கட்டம் கரெக்டா சொல்லிட்டோம்னா யாரையும் கூப்பிட்டு வர மாட்டாங்க.

இனிமேல் நம்ம ஃபேமிலிக்கு விட வேணாங்க பேச்சிலரு க்கு விடுவாேம் அதான் நல்லது என்று சொன்னால் கோதண்டம் மனைவி.

கோதண்டத்துக்கும் அதுதான் சரி என்று பட்டது. தன்னுடைய வீட்டில் குடியிருக்கும் அத்தனை பேரிடமும் கவன சுற்றறிக்கை அனுப்பினார். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் தன்னுடைய வீடுகளை எல்லாம் இடித்து விட்டு பெரிய அளவில் கட்டப் போவதாக ஒரு பொய்யை சொல்லி அத்தனை பேரையும் காலி செய்தார் .

நீங்க எவ்வளவு பெரிய வீடு கட்டினாலும் இங்கே தான் வந்திருப்போம். வாக்கு கொடுங்க என்று குடியிருந்தவர்கள் சொல்ல உங்களுக்கு இல்லாமலா வாங்க என்று பொய்யாக சிரித்து பொய்யாகப் பேசி அத்தனை பேரையும் வெளியே அனுப்பினார்.

குடியிருந்தவர்களை வெளியே அனுப்பப்பட்ட பாடு பெரும்பாடா போச்சு. இல்லன்னா ஒரு பயலும் வீட்டை விட்டு வெளியேற மாட்டான். 50 வருடம் நிறைய கூட செப்டிக் டேங்க் அஞ்சு வருடத்துல நிறைஞ்சு வழியுது. அஞ்சு வருஷம் கேரண்டி இருக்கிற மோட்டார் ஒன்றரை வருஷத்துல தீஞ்சு போகுது. இனிமே குடும்பங்களை குடி வைக்க கூடாது தப்பு என்று நினைத்த கோதண்டம் அத்தனை குடும்பங்களையும் காலி செய்து விட்டு வீடுகள் வாடகைக்கு விடப்படும் பேச்சிலர் ஒன்லி என்று அறிவிப்பு பலகை தொங்க விட்டார்.

இதற்கு முன்னால் கோதண்ட வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பஸ்தன் கோதண்ட வீட்டில் தாெங்கிக் கொண்டிருக்கும் அறிவிப்பு பலகையைப் பார்த்து அதிர்ந்து போனார்.

என்ன சார் வீட்டை கட்டிட்டு எங்களுக்கு வாடைக்கு வரேன்னு சொன்னீங்க? இப்போ பேச்சிலர் ஒன்லி போட்டு வச்சிருக்கீங்க என்னது அது ? என்று கேட்க

என் வீடு; நான் என்ன வேணும் உனக்கு என்ன? என்று அவரிடம் கோபப்பட்டார் கோதண்டம்.

இப்போ நானும் பேச்சுலர் தாங்க ; நான் வந்துரவா என்றான் முன்னாள் குடியிருந்த குடும்பஸ்தன் . அய்யய்யோ வேண்டாம்; நீ கல்யாணம் ஆனவன். நீ வருவ. அதுக்கப்புறம் உம் பொண்டாட்டி வருவா . அதுக்கப்புறம் உன் பிள்ளை வரும் ; சொந்த பந்தம் அப்படியே வரும்; பேச்சிலரா இருக்கிறது கல்யாணம் ஆகாதவங்க. நீ கல்யாணம் ஆனவன். உனக்கு வீடுஇல்லை என்று வீடு கேட்டவனை துரத்தி விட்டார் கோதண்டம் .

கல்யாணம் ஆனவன். பொண்டாட்டி இல்லாத உனக்கு பேச்சிலர் இல்லையா ? கோபித்துக் கொண்டு போனார் முன்பு குடி இருந்தவர்.

இப்போது கோதண்டம் வீட்டிற்கு பேச்சிலர்கள் படை எடுத்தார்கள். இருந்தாலும் கோதண்டத்திற்கு அவர் மனைவியைப் பற்றியும் தன் பெண் குழந்தைகளைப் பற்றி பயம் அடிவயிற்றை கிள்ள ஆரம்பித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *