செய்திகள்

பெரம்பலூரில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாட்டு பணி: கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர், மார்.10–

பாராளுமன்ற பொதுத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாட்டு பணிகள் குறித்த தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது.

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தோ்தல், 2019-ஐ முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் தோ்தல் முன்னேற்பாடு குறித்தும், தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல் தொடர்பாகவும் தோ்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள 20 தலைமை கண்காணிப்பு அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் 8.3.2019 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் ஒவ்வொரு தலைமை கண்காணிப்பு அலுவலருக்கும் தேர்தல் தொடர்பான பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி எலக்ட்ரானிக் வாக்கு எந்திரம் மேலாண்மை, வாகன மேலாண்மை, தேர்தல் பணிக்காக அலுவலர்களை நியமனம் செய்தல், தோ்தல் நடத்தை விதிகள், செலவின கண்காணிப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, பதற்றமான வாக்குசாவடிகளை கண்காணித்தல், வாக்குச்சீட்டு, ஊடக மேலாண்மை, கணினியாக்கம், SVEEP, ICT பயன்பாடுகள், தோ்தல் தொடர்பாக திட்டமிடல் ஆகிய தலைப்புகளில் மேற்படி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தோ்தல் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், அனைத்து தலைமை கண்காணிப்பு அலுவலர்களும் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை செவ்வனே செய்யுமாறு கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் அழகிரிசாமி, ஜெய்னுலாப்தீன் மற்றும் தலைமை கண்காணிப்பு அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் சட்டமன்ற அளவிலான தலைமை பயிற்றுனர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *