செய்திகள்

புதிதாக நான்கு 108 அவசரகால ஊர்திகள் சேவை : அமைச்சர் காமராஜ் தொடக்கி வைத்தார்

திருவாரூர் மாவட்ட கலெக்டரக வளாகத்தில்

புதிதாக நான்கு 108 அவசரகால ஊர்திகள் சேவை :

அமைச்சர் காமராஜ் தொடக்கி வைத்தார்

திருவாரூர், செப்.20–

திருவாரூர் மாவட்ட கலெக்டரக வளாகத்தில் புதிதாக நான்கு 108 அவசரகால ஊர்திகள் சேவை துவக்க விழாவில் கலந்து கொண்டு நான்கு அவசரகால ஊர்திகள் சேவையை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் த.ஆனந்த் தலைமை வகித்தார்கள்.

பின்னர் உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்ததாவது:–

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு தேவையான அவசர சிகிச்சை மருந்துகள், மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் வசதியுடன் ஏற்கனவே 13 அவசரகால ஊர்திகள் இயங்கி கொண்டிருக்கும் நிலையில் கொரோனா பெருந்தொற்று அவசரநிலை முன்னிட்டும் மக்களின் சிகிச்சைக்கு உடனடியான சேவையை முன்னிட்டும் இன்றைய தினம் மேலும் நான்கு புதிய அவசரகால ஊர்திகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் மொத்தம் 17 அவசரகால ஊர்திகள் என்ற அளவில் சிறப்பாக மக்கள் சேவை செய்ய முடியும் என்ற வகையில் நான்கும் முறையே திருமக்கோட்டை, குடவாசல், திருத்துறைப்புண்டி, மற்றும் நன்னிலம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு சேவையை துவங்க உள்ளன என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.ராஜமூர்த்தி திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் என்.பாலசந்திரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் மரு.விஜயகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *