வாழ்வியல்

புகையிலைப் பழக்கத்தை மக்கள் விட்டொழிக்க உதவும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி

புகையிலைப் பழக்கத்தை விட்டொழிக்க அதை விரும்புவோருக்கு நேரடியாக சிகிச்சை அளிப்பது ஒரு முக்கியமான நடவடிக்கை.

இதற்காக புகையிலை பொருள் நிறுத்தும் மருத்துவமனைகள் நிறுவுதல் முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாகும்.

புற்றுநோய் மருத்துவமனைகள், மனநிலை மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றின் மூலம் புகையிலைப் பழக்கத்தை விட்டொழிக்க நாடு முழுவதும் 12 மாநிலங்களில் புகையிலை நிறுத்த மருத்துவ மனைகள் உருவாக்கப்பட்டன.

புகையிலைப் பழக்கத்தை விட்டொழிக்க உதவும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் விதமாகப் புகையிலை பழக்க சிகிச்சைக்கான தேசிய வழிகாட்டுதல்கள் இந்திய அரசால் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டன.

சமூகம் சார்ந்த புகையிலை ஒழிப்பு மாதிரியை உருவாக்க பல குறுக்கிட்டு மேற்கொள்ளும் ஆய்வுகள் ஆதரிக்கப்பட்டன.

தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டம் (National Tobacco Control Program) புகையிலைப் பயன்பாட்டால் விளையும் தீமைகளையும் புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்களையும் அவற்றை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் 2007-08 ஆம் ஆண்டு தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது.

ஒட்டுமொத்தமான கொள்கை வடிவமைத்தல், திட்டமிடுதல், கண்காணித்தல், வெவ்வேறு செயல்பாடுகளை மதிப்பிடுதல் ஆகியவற்றிற்குத் தேசிய புகையிலைக் கட்டுப்பாட்டுத் துறை பொறுப்பு ஆகும். தேசிய அளவிலான பொது விழிப்புணர்வை ஏற்படுத்தப் பொதுமக்கள் விழிப்புணர்வு–ஊடகங்கள் வழி, பிரச்சாரம் மற்றும் நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *