செய்திகள்

பீகார் வெயில் கொடுமைக்கு இதுவரை 130 பேர் பலி

பாட்னா, ஜூன்.18–

கோடை வெயிலின் கடுமை இன்னும் முடிந்த பாடில்லை. கொடுமையான கோடை வெப்பத்திற்கு பீகாரில் இதுவரை 130 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கயா மாவட்டத்தில் மக்கள் மாலை 4 மணி வரை வெளியே வரக்கூடாது என கலெக்டர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வரலாறு காணாத கோடை வெயிலால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. வட மாநிலங்களிலும் வெயில் கொடுமை அதிகரித்துள்ளது.

பீகாரில் கடந்த 2 நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வருகிறது. 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

கயா, பாட்னா, பகல்பூரில் இது வரை 130 பேர் இறந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை வெயில் மேலும் அதிகரித்தது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கயா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் ஏற்கனவே மூளைக்காய்ச்சலுக்கு 100 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் வெயில் கொடுமை வேறு வாட்டி வதைக்கிறது. 22ந் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *