செய்திகள்

பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜூலை 8

தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

போலீஸ் டி.ஜி.பி.யின் அறிக்கையை ஏற்று தமிழக அரசு இன்று இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து சில இடங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் (உள்துறை) எஸ்.கே. பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *