செய்திகள்

பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: மணீஷ், சிங்ராஜு தங்கம், வெள்ளி வென்று சாதனை

டோக்கியோ, செப். 4–

டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீட்டர் துப்பாக்கிசுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வாலுக்கு தங்க பதக்கமும், சிங்ராஜுக்கு வெள்ளி பதக்கமும் கிடைத்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2020 போட்டியில் 50மீ கலப்பு துப்பாக்கிச் சுடுதல் பிஸ்டல் எஸ்எச்1 பிரிவு இறுதிப் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் மணிஷ் நார்வால், சிங்ராஜு அதானா ஆகியோர் பங்கேற்று சிறப்பான திறனை வெளிப்படு இலக்கை துல்லியமாக சுட்டு அசர வைத்தனர்.

இப்போட்டியில் 19 வயதான மணிஷ் நார்வால் 218.2 புள்ளிகளுடன் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். 2020 பாராலிம்பிக்கில் இந்தியர் வெல்லும் 3வது தங்கம் இதுவாகும், இவர் ஏற்கனவே 229.1 புள்ளிகளுடன் இப்பிரிவில் உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு வீரரான சிங்ராஜு அதானா 216.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

ஏற்கனவே, ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடுதல் எஸ்.எச்.1 பிரிவில் 216.8 புள்ளிகள் பெற்று சிங்ராஜு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்தியாவின் அவானி லெகாராவைத் தொடர்ந்து, ஒரே பாராஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று சிங்ராஜு அசத்தியுள்ளார். ஒரே போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீரர்களில் மணிஷ் நார்வாலுக்கு வயது 19, சிங்ராஜூக்கு வயது 39. ஒரே பிரிவில் இந்தியாவுக்கு தங்கமும், வெள்ளியும் வென்று இந்தியர்கள் வரலாறு படைத்திருக்கின்றனர். இது இந்தியர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

டோக்கியோ பாராஒலிம்பிக் தொடரில், வரலாறு காணாத வகையில் இந்தியா பதக்க மழையை பொழிந்து வருகிறது. இதன்படி 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என்று மொத்தம் 15 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 34 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *