வாழ்வியல்

பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் ஐஸ்கிரீம்

ஐஸ்கிரீமிலுள்ள சர்க்கரைச் சத்தும், கொழுப்புப் பொருட்களும் நம் உடலிலுள்ள கொழுப்பைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகப்படுத்தி விடும். இதனைத்தான் உடல் பருமன் ஆகுதல் என்கிறோம். அதிகரித்து கொழுப்புச் சத்து நமது உடலில் ஓடுகிற ரத்த நாளங்களில் படிந்து படிந்து ரத்த நாளங்களின் விட்டம் குறைந்து, ரத்தக் குழாய் சுருங்கி விடுகிறது. இதுவரை தடையின்றி ஓடிய ரத்தம் ரத்தக் குழாய் சுருங்கிய நிலையில் சீரான ஓட்டம் தடைப்பட்டு குறைகிறது. இதனால் இதயத்துக்குச் செல்லக் கூடிய ரத்தத்தின் அளவும் ஆக்சிஜன் அளவும் குறைந்து, ரத்த அழுத்தம், மாரடைப்பு, தசை வலிமை குன்றுதல் ஏற்படுகின்றன.

ஐஸ்கிரீமில் அடங்கியுள்ள சர்க்கரை பல்வேறு நோய்களுக்கு காரணமாகிறது. குறிப்பாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. ஐஸ்கிரீம் அல்லது அதிக இனிப்புள்ள செயற்கை பானங்கள் சாப்பிடும் போது அதனை ஜீரணிக்க அதிகளவு இன்சுலின் சுரக்கிறது. இதனால் திடீரென உடலின் குளூக்கோஸ் அளவு குறைந்து அதன் விளைவாக தலைவலியும் ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *