செய்திகள்

பஞ்சாப் நேஷனல் வங்கி நிலுவைக் கடன் வசூல் சிறப்பு முகாம்

Spread the love

சென்னை, செப். 12–

பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் நிலுவைக் கடன் தொகை வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் வங்கியின் மேலாண்மை இயக்குனர் சுனில் மேத்தா தலைமையில், இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிஎன்பி கோபுரத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் வங்கிகளில் நீண்ட காலமாக செலுத்தாமல் உள்ள வராக் கடன்களை ஒரே தவணையாக சிறப்பு சலுகையுடன் செலுத்தலாம். எனவே கடனை செலுத்த முடியாமல் பல்வேறு இடர்பாடுகளால் தவித்து வந்த பயனாளிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டமும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை வங்கியின் செயல் இயக்குனர் எல்.வி.பிரபாகர் அறிவுறுத்தலின் பேரில் வங்கி மேலாளர்கள் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *