செய்திகள்

பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி ஓரியண்டல் வங்கி இணைப்பு

Spread the love

பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் வங்கி, ஓரியண்டல் வங்கி இணைப்பு

நிர்வாக இயக்குனர் மல்லிகாஜூனராவ் தகவல்

 

சென்னை, ஏப். 1–

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இதர பொதுத் துறை வங்கிகளான யுனைடெட் வங்கி மற்றும் ஓரியண்டல் வங்கி இணைக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் ஸ்டேட் வங்கிக்கு அடுத்து இரண்டாவது மிகப் பெரிய வங்கியாக இது உருவெடுத்து வந்துள்ளது. இதனால் இந்த வங்கி உலக வங்கி சேவை வழங்கும் வங்கியாக நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் நிர்வாக இயக்குனர், தலைமை செயல் அதிகாரி எஸ்.எஸ். மல்லிகாஜூனராவ் தெரிவித்தார்.

ஏப்ரல் 1–ந் தேதி முதல் இணையும் இரு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இனி பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளராக கருதப்படுவர். இதன் மூலம் இதற்கு 11 ஆயிரம் கிளைகள், 13 ஆயிரம் ஏ.டி.எம்கள், ஒரு லட்சம் ஊழியர்கள் இதற்கு இருப்பர் என்றார்.

இணைப்பு காரணமாக வாடிக்கையாளர் எந்த ஒரு தேவையையும் எந்த ஒரு கிளையிலும் கேட்டுப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளருக்கு மொபைல், இன்டர்நெட் வங்கி சேவை எல்லா கிளைகளிலும் வழங்கப்படும் என்றார் மல்லிகாஜூனராவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *