செய்திகள்

நாகையில் ரூ.50 லட்சத்தில் வளப்பார் ஆறு கடைமடை நீர்த்தேக்க பழுதுபார்த்தல் பணி

நாகையில் ரூ.50 லட்சத்தில் வளப்பார் ஆறு கடைமடை நீர்த்தேக்க பழுதுபார்த்தல் பணி

அரசு மேலாண் இயக்குநர் சத்யகோபால் நேரில் ஆய்வு

 

நாகப்பட்டினம், ஜூன் 3–

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம், நரிமணம் கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளஆதாரத்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வளப்பார் ஆற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளப்பார் ஆறு கடைமடை நீர்த்தேக்கம் சிறப்பு பழுதுபார்த்தல் பணிகளை அரசு மேலாண் இயக்குநர் சத்யகோபால் நேரில் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் குடிமராமத்து திட்டப் பணிகளை தமிழ்நாடு நீர் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்புக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.சத்யகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துதிட்டப் பணிகளை தமிழ்நாடு நீர் பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்புக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.கே.சத்யகோபால், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் பிரவீன் நாயர் உடன் இருந்தார்.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் வட்டம், கட்டுமாவடி கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளஆதாரத்துறை மூலம் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் முடிகொண்டான் ஆறு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும்,

நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டம், நரிமணம் கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளஆதாரத்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் வளப்பார் ஆறு மைல் 87ஃ3 ல் மேற்கொள்ளப்பட்டு வரும் சன்னமங்கலம் தலைப்பு மதகு மறுகட்டுமானம் செய்யும் பணி மற்றும் சன்னமங்கலம் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் மேலாண்மை இயக்குநர் சத்யகோபால் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எம்.எஸ்.பிரசாந்த், வருவாய் அலுவலர் மு.இந்துமதி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் இரா.பழனிகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, துணை ஆட்சியர் (பயிற்சி) அபிநயா, திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் (தஞ்சாவுர்) அன்பரசன், செயற்பொறியாளர் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம்) முருகவேல், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டியன், உதவிப் பொறியாளர்கள் கமலக்கண்ணன், லதா மகேஸ்வரி, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், நாகப்பட்டினம் வட்டாட்சியர் ஏ.பிரன்சிஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *