செய்திகள்

நவீன சுத்திகரிப்பு யந்திரத்துடன் வாட்டர் ஏ.டி.எம். : மறைமலை நகர், ஆவடியில் துவக்கப்பட்டது

சென்னை, ஆக.4

பன்னாட்டு நிறுவனமான ஆல்பா லாவல் நிறுவனம் போர் கிணறுகளிலிருந்து நீரை 10 அடுக்குகளில் சுத்திகரித்து வாட்டர் ஏ.டி.எம். மூலம் வழங்கும் யந்திரத்தை மறைமலை நகர், ஆவடியில் நிறுவி உள்ளது. இதில் ஏற்கனவே பணம் செலுத்திய கார்டை நுழைத்து, ஒரு கேன் ரூ.7 கட்டணத்தில் 20 லிட்டர் நீரை பிடித்துக் கொள்ளலாம். இதை மறைமலை நகர் நகராட்சி கமிஷனர் வி.விஜயகுமாரி துவக்கினார். 2வது யூனிட்டை இந்த நிறுவன ராம்தாஸ் சலுகே திறந்தார்.

இந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலை மறைமலை நகர் நகராட்சியில் காட்டாங்கொளத்தூர், காந்தி பூங்கா ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. ஆவடியில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் துவங்கும்.

இந்தியாவில் இந்த வாட்டர் ஏ.டி.எம்களை வாட்டர் லைப் கட்டமைத்து, பராமரிக்கிறது. 10 ஆண்டு வரை இது செயல்படுத்தும். இந்த யந்திர ஆயுள் காலம் 25 ஆண்டுகளாகும்.

ஒரு கேன் ரூ.7 வீதம் வசூலிக்கும் தொகை பராமரிப்பு ஊழியர் ஊதியம், நிர்வாக செலவுக்கு உபயோகமாகும்.

கோடைக் காலத்தில் ஐஸ் வாட்டர் பெறலாம். ஒரு மணி நேரத்துக்கு 1000 லிட்டர் நீர் சுத்திகரிக்க முடியும். 8 மணி நேரம் இயங்கினால் 8000 லிட்டர் நீர் 3 ஆயிரம் குடும்பங்களுக்கு கிடைக்கும் என்று ராம்தாஸ் சலுகே தெரிவித்தார்.

இது பற்றி அறிய www.alfalaval.com வலைதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *