செய்திகள்

நடிகை வாணிஸ்ரீ மகன் மர்ம சாவு

சென்னை, மே 23–

நடிகை வாணிஸ்ரீயின் மகன் மரத்தில் பிணமாக தொடங்கி நிலையில் கிடந்தார்.

பழம்பெரும் நடிகை வாணி ஸ்ரீ. இவர் டாக்டர் கருணாகரனை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகன் அபினய வெங்கடேஷ் (வயது 36). இவர், பெங்களூரில் ஒரு அரசு கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 4 வயதில் ஒரு மகனும், 8 மாசத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியை. இவர் மனைவி, குழந்தைகளுடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அபினய வெங்கடேஷ் இன்று தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *