செய்திகள்

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த 500 பேருக்கு மளிகைப் பொருட்கள்

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்த 500 பேருக்கு மளிகைப் பொருட்கள் :

வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்

 

திருச்சி, மே.9–

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.இந்த வகையில் திருச்சி மாநகராட்சி 18வது வார்டு பாலக்கரை பகுதியில் உள்ள மக்களுக்கு ஏழைகளுக்கு 25 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை நேற்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.

கரோனா வைரஸ் தொற்று தாக்குதல் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், படிப்படியாக ஊரடங்கு மே 17 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழக முதல்வர் அருமை அண்ணன் எடப்பாடி கே பழனிசாமி, தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனைப்படியும்,இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பிலும் அரசியல் கட்சியினரும் தன்னார்வலர்களும் தாங்களாக முன்வந்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறார். அவரது கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

அதன் படி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் உள்ளடக்கிய 19 வார்டு பகுதியான பாலக்கரை பகுதியை சார்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வெல்லமண்டி என் ஜவஹர்லால் நேரு ஏற்பாட்டில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் நேற்று அரிசி, முட்டை, மற்றும் 20 வகையான மளிகைப் பொருட்கள் கொண்ட நிவாரண தொகுப்பினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்தும் பொருட்களை வாங்கிச் சென்றனர்.

இதில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் அண்ணன் கே.சி.பரமசிவம், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் ஆர். ராஜ்குமார், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் எம்.ஏ. அன்பழகன், மாநகர எம்.ஜி.ஆர்., மன்ற தலைவர் சுரேஷ் குப்தா, பொதுக்குழு உறுப்பினர் பெருமாள், முன்னாள் துணை மேயர் ஆசிக் மீராவட்ட செயலாளர்

தியாகராஜன் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *