செய்திகள்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 21ந் தேதி முதல் செமஸ்டர் தேர்வு

திருச்சி, செப்.16

கொரோனா பொதுமுடக்கத்தால் இறுதியாண்டு மாணவர்களின் பருவத்தேர்வு செப்டம்பர் 21 முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தால் இறுதியாண்டு மாணவர்களின் பருவத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு, செப். இறுதிக்குள் தேர்வுகளை நடத்திட வேண்டும் என தமிழக அரசு அண்மையில் அறிவுறுத்தியது.

அதன்பேரில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் 140க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் இளங்கலை முதுகலை மாணவர்கள் சுமார் 90 ஆயிரம் பேருக்கு வரும் செப்.21 முதல் செப்.30 வரை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் குறித்த சுற்றறிக்கை ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். எனவே தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்கள் தயாராக இருக்குமாறும் மாணவர்களின் செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை அந்தந்த கல்லூரி முதல்வர்களிடம் தெரிவிக்குமாறும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *