நல்வாழ்வு
இஞ்சியில் அதிக அளவில் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகளும் வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. அதனால் இஞ்சிச் சாறு சருமத்துக்கு இயற்கையான பொலிவைக் கொடுக்கக்கூடியது. ‘‘இஞ்சிக்கு தோலில் நஞ்சு’’. எனவே இஞ்சித் தோலை மட்டும் சீவி எறிந்துவிட்டு பயன்படுத்தினால் அனைத்து நோய்களையும் தடுத்து நிற்கும் உயர்ந்த உணவு –மருந்து இஞ்சி.
இதில் அடங்கியிருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி நம்முடைய கூந்தலுக்கும் இயற்கையான பொலிவைத் தரும். பொடுகை அடியோடி விரட்டும். முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
மூளையில் கோடிக்கணக்கணக்காள நரம்பு செல்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவற்றில் சில கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு செல்லும். அதனால் தான் வயதாக வயதாக நோய்கள் , ஞாபக மறதி அதிகமாகிறது.
இஞ்சியில் உள்ள உட்பொருள்கள் மூளையின் நரம்பு செல்கள் அழியும் செயலை மெதுவாக்குகிறது.
இஞ்சியில் உள்ள இன்பிளமேட்டரி பண்பு மூளையில் ஏற்படும் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி தொற்றுக்களை நீக்குகிறது.
இஞ்சித் தண்ணீர் அளவுக்கு அதிகமாக ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
அதேபோல நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்பைக் கிரகித்துக் கொண்டு அதை உடலுக்குத் தேவையான ஆற்றலாக மாற்றுகிறது.
இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு எரிக்கப்படும். உடல் எடை குறையும். உடல் நலமடையும்.
நோயற்ற வாழ்வு மலரும். கோடி மகிழ்ச்சி கூடிவரும்.