சென்னை, ஏப். 24–
சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதற்கிடையே கடந்த மாதத்தில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55,000 கடந்தது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1.160 குறைந்து ரூ.53,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.145 குறைந்து ரூ. 6,700-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த மாதம் தொடக்கம் முதல் அதிரடியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று சவரனுக்கு திடீரென ரூ.1,160 குறைந்தது மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.53,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.6.730-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.86.50-க்கும் கட்டி வெள்ளி ரூ.86,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.