செய்திகள்

‘டாபர் தேன்’ விளம்பர தூதராக நடிகை தமன்னா

Spread the love

கோவை, ஜூலை 10 –

டாபர் தேனின் தென்னிந்தியாவுக்கான புதிய விளம்பர தூதராக நடிகை தமன்னாவை நியமித்துள்ளதாக டாபர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக திகழும் நடிகை தமன்னாவை வைத்து எடுக்கப்பட்ட “பிட்டாக இருங்கள்; இளமையாக உணருங்கள்” என்னும் வரிகளுடன் கூடிய புதிய விளம்பரத்தையும் அறிமுகம் செய்தது.

இந்த விளம்பரம் தமிழ்நாடு, கர்னாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகிறது.

இது குறித்து டாபர் இந்தியா ஹனி மற்றும் குளுக்கோஸ் பிரிவு தலைவர் குணால் சர்மா கூறுகையில், தென்னிந்திய பிரச்சார தூதராக நடிகை தமன்னாவை நியமித்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒவ்வொரு நாள் காலையிலும் டாபர் தேனை மிதமான சுடு தண்ணீரில் கலந்து குடிக்கலாம் அல்லது உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காலை உணவில் சர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தினால் உடல் கட்டுக்கோப்பாக இருக்கும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில், தமன்னா கூறுகையில், டாபர் தேனின் விளம்பர தூதராக நான் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. மேலும், பல நுகர்வோர் டாபர் தேனை அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் பின்பற்றவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த விளம்பரம் மூலம் நான் ஊக்கப்படுத்துவேன் என்று நம்புகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *