சினிமா செய்திகள்

‘‘தியேட்டரில் சினிமா ரிலீஸ் ஆனால்தான் கொண்டாட்டம்’’ : ஜோதிகா சொல்கிறார்

கொரோனா காரணமாகத் தான் ‘ஆன்லைனில்’ நாளை பொன்மகள் வந்தாள் படம் ஒளிபரப்பு

‘‘தியேட்டரில் சினிமா ரிலீஸ் ஆனால்தான் கொண்டாட்டம்’’ : ஜோதிகா சொல்கிறார்

 

சென்னை, மே. 28–

‘உயிர்க்கொல்லி’ கொரோனா –அதன் பரவல் காரணமாக ஊரடங்கு அதனைத் தொடர்ந்து தியேட்டர்கள் தற்காலிகமாக மூடல். இவையெல்லாம் ஒன்று சேர்ந்து தான் என் பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனில் (ஓடிடி–ஆன் த டாப்) ரிலீசாக வைத்திருக்கிறது.

நாளை 29–ந் தேதி இப்படம் அமேசானில் ஒளிபரப்பாகிறது என்று நடிகை ஜோதிகா கூறினார்.

ஒரு படம் ‘தியேட்டர்களில் ரிலீஸ் ஆவது தான் கொண்டாட்டமாக இருக்கும். என்று கூறிய ஜோதிகா, ‘கதையம்சம் கொண்ட படங்களுக்கு ஆன்லைன் நல்ல தளமாக இருக்கும். ஆனால் தியேட்டர்களில் இருக்கும் எதிர்பார்ப்பும்; ரசிகர்களின் வரவேற்பும் தனி தான்’ என்றார்.

‘குறிப்பாக பெண்களை மையப்படுத்தும் படங்களுக்கு தியேட்டர்களில் கூட்டம் குறைவு தான்’ என்பதை ஒப்புக் கொண்ட அவர், 20 ஆண்டுகள் கழித்தும் என் படங்கள் பேசப்பட வேண்டும். அதை மனதில் வைத்தே நான் படங்களைத் தேர்வு செய்கிறேன் என்றார்.

கொரோனா முடிந்ததும் பல கதாநாயக நடிகர்களின் படங்கள் ரிலீசாக காத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு தியேட்டர்களை கொடுத்து விட்டு என் படம் பொன்மகள் வந்தாள் ரிலீஸ் ஆக குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும் என்றும் ஜோதிகா கூறினார்.

தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவு இணைய தளத்தின் படம் ரிலீசை ஆதரிக்கிறது. ஆனால் இன்னொரு பிரிவு கடுமையாக எதிர்க்கிறது. இந்நிலையில் ஒரு பிரிவினரின் கடுமையான எதிர்ப்புக்கு நடுவில் நாளை பொன் மகள் வந்தால் இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *