செய்திகள்

சிறுபான்மையினர் கடனுதவி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் பொன்னையா தகவல்

காஞ்சீபுரம், ஜூலை 3-–

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுபான்மையினர் கடனுதவி பெற உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020–2021 ஆண்டும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான கல்விக் கடன், தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கு கடனுதவி திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) ——இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் (மனுதாரர் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் – திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகன கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களை அளித்து விண்ணப்பம் செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *