சினிமா செய்திகள்

சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி

சென்னை, மே.13–

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது உலகம் முழுவதும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. 

உலக அளவில் பிரபலமான இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தமிழில் தொகுத்து வழங்க இருக்கிறார். இதனால் இந்நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

ஏற்கனவே சமையலும் காமெடியும் கலந்து ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ அமையுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *