வாழ்வியல்

கொழுப்புக் கட்டிகளைக் கரைத்து உடல் எடையையைக் குறைக்கும் கொள்ளு

கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ இது பலமுறை கேட்ட முதுமொழி.

கொள்ளு ஓர் ஆரோக்கிய உணவு. அதை ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம். ரசம், துவையல், குழம்பு என விதவிதமாகச் சமைத்தும் சாப்பிடலாம்.

மருத்துவ குணம் நிறைந்தது. கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு அத்தனை சக்தி உண்டு. அதற்காக இதை வெறும் கொழுப்பைக் குறைக்கும் உணவு என்று சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. `ஏராளமான மருத்துவப் பலன்களையும் உள்ளடக்கியது’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது ஓர் ஆரோக்கிய உணவு. ஊற வைத்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.

கொள்ளுவை நன்கு அரைத்து, சாறு எடுத்து சூப்பாகச் செய்தும் அருந்தலாம். இதை ஊறவைத்த நீரில்கூட எண்ணற்ற மருத்துவப் பலன்கள் இருக்கின்றன.

ஆயுர்வேத, சித்த மருத்துவத்திலும் கொள்ளு பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. இதன் மகத்துவத்தை அறிந்திருந்ததால்தான் நம் முன்னோர்கள் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கு இதை உணவாகக் கொடுத்தனர். குதிரைக்கு இது சிறந்த உணவு. அதனால்தான், குதிரை கொழுப்புக் கூடாமல் சிக்கென்ற உடல்வாகோடு இருக்கிறது; அதிவேகமாக ஓடுகிறது;

அருமையான மருத்துவகுணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது என்கிறார் சித்த மருத்துவர் ரமேஷ்.

கொள்ளு – அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும் திசுக்கள் முறையாக வேலைசெய்யவும் பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.

சாப்பாட்டில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொண்டால் உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *