செய்திகள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க புதிய சாதனம் கண்டுபிடிப்பு

சென்னை, மார்ச்.5–பிரபல இந்திய அறிவியலாளரும் கண்டுபிடிப்பாளருமான டாக்டர். ராஜா விஜயகுமாரால் உருவாக்கப்பட்டுள்ள வைரஸ் தணிப்பு சாதனம் உள்ளடரங்க அமைவிடங்களில் கொரோனா வைரஸ் பரவலைத் தடைசெய்ய உதவி வருகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகள், ஓட்டல்கள், அலுவலகங்கள், உணவகங்கள், அரங்கங்கள், போக்குவரத்து வசதிகள், சில்லறை விற்பனையகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற தொழில் அமைவிடங்கள் கொரோனா பரவலுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் திரும்பவும் மற்றும் பாதுகாப்பான சூழலில் அவர்களது உள்ளார்ந்த மற்றும் வெளியார்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றவும் இச்சாதனம் அவைகளை ஏதுவாக்குகிறது.

ஷைகோகேன் கார்ப்பரேஷனின் தரவின்படி, பல தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் இந்த தனிச்சிறப்பான சாதனத்தின் மீது ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கும் நிலையில் இதற்கு தொடர்ந்து அதிகரித்து வரும் தேவை காணப்படுகிறது. இம்மாநகரில் ஏற்கனவே ஷைகோகேன் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. தங்களது வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வருகையாளர்களை இந்த பெருந்தொற்று காலத்தில் தங்களது கட்டிட வளாகங்களில் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாக்க விரும்புகின்ற பல நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் விசாரணைகளும் ஆர்டர்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த உருளை வடிவிலான சாதனம், ஸ்கேலின் ஹைப்பர்சார்ஜ் கொரோனா கேனன் என்பதன் சுருக்கமாக ஷைகோகேன் என அழைக்கப்படுகிறது. நிமோனியா, ஏஆர்டிஎஸ், எஸ்ஏஆர்எஸ், எம்இஆர்எஸ், கோவிட் – 19 போன்ற நோய்களை விளைவிக்கின்ற கொரோனா வைரஸ் குடும்பம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றால் தூண்டப்படுகின்ற பிற நோய்கள் மட்டுமின்றி, பன்றிக்காய்ச்சல் மற்றும் பறவைக்காய்ச்சல் போன்ற பெருந்தொற்றுகள் மற்றும் வருடாந்திர ரீதியில் பருவகாலத்தில் தோன்றுகின்ற ஃபுளு காய்ச்சலை முடுக்கி விடுகின்ற இன்ஃபுளுயன்சா குடும்ப வைரஸ்கள் பரவலிலிருந்து, உள்ளரங்க அமைவிடங்களை பாதுகாப்பானதாக ஆக்குவதில் திறம்பட செயல்படுவதாக இச்சாதனம் கண்டறியப்பட்டிருக்கிறது. மக்களின் உடல்நலத்தை பாதுகாக்கவும் மற்றும் இழக்கப்படக்கூடிய உற்பத்தி திறனில் மில்லியன் கணக்கான பணி நேரங்களையும் சேமிக்கவும் நடப்பு மற்றும் எதிர்கால வேரியண்ட்கள் மற்றும் இந்த நச்சுயிரிகளின் மாறிய மரபணு உயிரிகள் ஆகியவை மீதும் ஷைகோகேன் திறம்பட செயலாற்றுகிறது.

ஷைகோகேன் கார்ப்பரேஷனின் தலைமை செயலாக்க அதிகாரி திரு. அலோக் ஷர்மா பேசுகையில், “உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனையகங்கள் செய்திருக்கின்ற பல்வேறு நச்சுயிரியல் சோதனை அறிக்கைகளின்படி, உள்ளரங்க அமைவிடங்களில் 99.994 சதவிகித திறனுடன் கொரோனா வைரஸ் மற்றும் இன்ஃபுளுயன்ஸா வைரஸ் குடும்பங்களை திறனிழக்கச் செய்வதாக ஷைகோகேன் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களுக்கு எந்த எதிர்மறை பாதிப்பும் இதனால் ஏற்படுவதில்லை. இச்சாதனம், வேறுபிற நுண்ணுயிரிகள் அல்லது பூசனங்களை பாதிப்பதில்லை என்பதால், சுற்றுச்சூழலில் நுண்ணுயிரிகளின் சமநிலை பேணப்படுகிறது.

இந்தியா, யுஎஸ்ஏ மற்றும் ஐரோப்பா, ஆசிய பசிபிக் பிராந்தியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மத்தியகிழக்கு பிராந்தியம் மற்றும் ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் ஷைகோகேன் சாதனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த புத்தாக்க சாதனத்தை வேறுபிற நாடுகளிலும் நாங்கள் அறிமுகம் செய்து வருகிறோம். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பெருநிறுவனங்கள் – தொழில் – கல்விசார் நிறுவனங்களிடமிருந்து, இச்சாதனத்திற்கு வலுவான தேவையை இது ஏற்கனவே கண்டு வருகிறது என்று கூறினார்.

ஷைகோகேன் – ன் கண்டுபிடிப்பாளரும் மற்றும் ஆர்கனைசேஷன் டி ஸ்கேலின் – ன் உலக தலைவருமான டாக்டர். ராஜா விஜய் குமார், இது தொடர்பாக கூறியதாவது: –

“கொரோனா வைரஸ் வகை பெருந்தொற்றுப் பரவல்கள், துரிதமான இடைவெளி உள்ள காலஅளவுகளில் ஏற்படுகின்றன. கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த தொற்றுகள் அதிகமாக தொற்றுப்பரவல் திறனுள்ளவையாக கடந்த 17 ஆண்டுகளில் தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்ற மரபு பிறழ்வுகளைக் கொண்டு ஆபத்தானதாக உருவெடுத்திருப்பது, ஷைகோகேன் போன்ற சாதனத்தின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது. இந்த வைரஸின் மிகப்பெரிய சவால், அதன் தொற்றும் திறன் அல்லது தீவிர வீரியத்தன்மையாகும். தொற்றுப்பரவல் சங்கிலியை உடைப்பதற்கு உள்ளரங்க சூழல்களில் கூர்நோக்கத்துடன் கூடிய செயல்பாடு அவசியமாக இருக்கிறது. ஏனெனில், அவைகள் தான் தொற்றுப்பரவலுக்கு மிக அதிக இடர் உள்ளவையாக இருக்கின்றன.”

அவர் மேலும் பேசுகையில், “2017-ல் பருவகால ஃபுளு காய்ச்சலின் பல சம்பவங்கள் பெங்களுருவில் உள்ள எமது வளாகத்தில் நிகழ்ந்தன. இதுவே இந்த சாதனத்தை வடிவமைக்கவும் உருவாக்கவும் மற்றும் நிறுவவும் என்னை நிர்பந்தித்தது. இதுவே பிறகு ஷைகோகேன் என பெயர் சூட்டப்பட்டது. ஒரு ஆண்டுக்குப் பிறகு எமது வளாகத்திலிருந்து இந்த பருவகால ஃபுளு தொற்றானது, ஏறக்குறைய முழுமையாக இல்லாமல் போய்விட்டது. கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டபோது, உலகளாவிய மருத்துவ பரிசோதனையகங்களுக்கு பரிசோதிப்பு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் இணக்கநிலை சோதனைக்காக இச்சாதனம் அனுப்பி வைக்கப்பட்டது. கொரோனா வைரஸ்களுக்கும் எதிராக, சமஅளவில் திறம்பட செயல்படுவதாக இச்சாதனம் கண்டறியப்பட்டது. இத்தகைய நெருக்கடி நிலை ஒட்டுமொத்த உலகையும் தனது பிடியில் கொண்டு வரும் என்ற சாத்திய வாய்ப்பை கற்பனை செய்வதற்கு மிக முன்னதாகவே கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்துப் போரிட உலகின் முதல் தொழில்நுட்பத்தை நாங்கள் ஏற்கனவே உருவாக்கியிருக்கிறோம் என்ற உண்மையை உணர்வது பிரமிக்கச் செய்கிறது,” என்று கூறினார். நன்கு வடிவமைக்கப்பட்ட ஷைகோகேன் சாதனம் பயனளிப்பதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதோடு முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒன்றாகும். மனிதர்கள் அல்லது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்ற கதிர்வீச்சு, வேதிப்பொருட்கள், ஓசோன் அல்லது வேறு எந்த பொருட்களையும் இது பயன்படுத்துவதோ அல்லது உமிழ்வதோ இல்லை. நிறுவப்படுகின்ற ஒரு ஒற்றை சாதனம், 1000 சதுரஅடி (அல்லது 10,000 கனஅடி) பரப்பளவில் திறம்பட செயல்படும் வீச்செல்லையைக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய உள்ளரங்க அமைவிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களை நிறுவலாம். மருத்துவமனைகள், கிளினிக்குகள், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள், வங்கிகள், உற்பத்தி ஆலைகள் மற்றும் ரீடெய்ல் விற்பனையகங்கள், ஹோட்டல்கள் போன்ற விருந்தோம்பல் துறை, அரசு அலுவலகங்கள், ரியல் எஸ்டேட் துறை மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்ற அனைத்து சந்தைப்பிரிவுகளிலும் விரிந்து பரந்த பயன்பாட்டை ஷைகோகேன் கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *