செய்திகள்

கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா: 1.27 லட்சத்தை நெருங்கிய ஒரு நாள் பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 8–

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மாதம் 5–ம் தேதி இந்தியாவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 789 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 685- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1 கோடியே 29 லட்சத்து 28 ஆயிரத்து 574 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 18 லட்சத்து 51 ஆயிரத்து 393 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 9 லட்சத்து 10 ஆயிரத்து 319- பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 66 ஆயிரத்து 862- ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 9 கோடியே 1 லட்சத்து 98 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *