வாழ்வியல்

கெட்ட கொழுப்பைக் கரைக்கும் நெல்லிக்காய் ஜூஸ்

நாம் ஆரோக்கியமாகவும் எவ்வித நோயும் இல்லாமலும் நீண்ட நாட்கள் இருக்க நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வருவது நல்லது.

மருத்துவ குணத்தில் முதலிடம் வாய்ந்தது நெல்லிக்காய்.

இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஒருவரின் உடல் பருமன் அவர்களின் உயரத்திற்கு ஏற்றார்போல் சமமாக இருப்பது என்பது அரிதாக உள்ளது.

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் 20 அல்லது 30 மில்லி நெல்லிக்காய் ஜூஸ் தினமும் காலையில் குடிக்க உணவில் இருக்கக்கூடிய அதிகமான கொழுப்புகள் கரைந்து உடலில் தங்கியுள்ள நாட்பட்ட கொழுப்புக்களும் கரைந்து வெளியேறும். மேலும் எலும்புகள் உறுதியாக இருப்பதற்கும் நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது. உடலில் எலும்புகளில் இருக்கும் ஆஸ்டியோ கிளாஸ் என்னும் செல்கள் தான் எலும்புகளை வலுவிழக்கச் செய்கிறது. அத்தகைய செல்கள் நெல்லிக்காய் ஜூஸ் பருகுவதன் மூலம் குறைகிறது.

இதோடு மட்டும் அல்லாமல் நமது கண் பார்வை தெளிவாக இருக்கவும் நெல்லிக்காய் மிகவும் உதவுகிறது. கண்ணில் ஏற்படும் கண் புரை, கண் அழுத்தம் போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை இதற்கு உள்ளது. அதே சமயம் மிகவும் இளமையாக இருக்கவும் நெல்லிக்காய் துணைபுரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *