செய்திகள்

குறைந்த விலையில் புதிய நோக்கியா போன் எச்எம்டி குளோபல் அறிமுகம்

கோவை, ஜூன் 15

எச்எம்டி குளோபல் நிறுவனம் நவீன அம்சங்களுடன் புதிய நோக்கியா 2.2- போனை அறிவித்து உள்ளது.

எச்எம்டி குளோபல் முதன்மை தயாரிப்பு அதிகாரி ஜுஹோ சார்விகாஸ், கூறியதாவது: “தொழில் துறையில் சமீபத்திய மற்றும் சிறந்த கண்டுபிடிப்புகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

நோக்கியா 2.2 மூலம், முன்னெப்போதையும் விட ஏராளமான மக்களுக்கு மிகச்சிறப்பான AI அனுபவங்களை வழங்குகிறோம். உங்கள் போனுக்கான கூடுதல் பாதுகாப்பை வழங்கும் செயல்பாடு மற்றும் இயக்கத்தை கண்டறிதலு டனான பயோமெட்ரிக் பேஸ் அன்லாக், AI படம்பிடித்தல், கூகுள் லென்ஸ் மற்றும் ஒரு பட்டனை அழுத்தினால் கிடைக்கும் கூகிள் அசிஸ்டெண்ட் போன்ற அம்சங்களுடன் புதுமைகளை புகுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.”

எச்எம்டி குளோபல் துணைத் தலைவர் மற்றும் உள்நாட்டு தலைவர் -(இந்தியா) அஜஸ் மேத்தா கூறியதாவது: “நோக்கியா 2.2 இந்திய சந்தையில் மிகவும் அணுகத்தக்க ஸ்மார்ட்போன் இன்று உள்ளது’.

இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் நோக்கியா 2.2-ன் அனுபவத்தை முன்கூட்டியே பெறமுடியும் என்பதை உறுதி செய்ய ஜூன் 30 கடைசிநாளாகும். 2/16 ஜிபி ஸ்டோரேஜ் ரகம் ரூ.6,999 எனும் விலையிலும், 3/32ஜிபி ஸ்டோரேஜ் ரகம் ரூ.7,999 எனும் விலையிலும் கிடைக்கும் வகையில் ஒரு மிகவும் கவரும் படியான குறிப்பிட்ட காலத்திற்கான சலுகையை நாங்கள் வழங்குகின்றோம் என்றார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *