செய்திகள்

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் வில்லிவாக்கம் கிளை திறப்பு

சென்னை, ஜூலை 19:-

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதியின் வில்லிவாக்கம் கிளை, நெ.22, சிவன் கோயில் தெற்கு மாட வீதி என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இக்கிளையை நிதியின் தலைவர் ராம.ராமநாதன் திறந்து வைத்தார். டாக்டர் சுப்புராஜ் பாதுகாப்பு பெட்டக வசதியை திறந்து வைத்தார்.

நிதியின் இயக்குனர்கள் என்.டி.நரசிம்மன், எல்.மெய்யப்பன், தலைமை செயல் அலுவலர் வி.கனகராஜ், பொது மேலாளர் மற்றும் தலைமை நிதி அதிகாரி ஆர்.பத்மநாபன், உதவி பொது மேலாளர்கள் ஆர்.எஸ். வெங்கடேசன், பி.சக்கரபாணி, சென்னை மண்டல மேலாளர் எஸ். மயில்வாகணன் ஆகியோர் உள்ளனர்.

முடிவில் கிளை மேலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *