வாழ்வியல்

காபி பயிரைத் தாக்கும் இலைத்துரு நோய்!

தமிழ்நாட்டில் காப்பி உற்பத்தி அதிகமாகி வருகிறது. எனவே விவசாயிகள் விழிப்புணர்வு பெற வேண்டியது அவசியம்.

ஹெமிலியா வாஸ்டாடிரிக்ஸ் என்னும் பூஞ்சையால், காப்பி இலைத்துரு நோய் உண்டாகிறது. முதலாவது 185ல் இந்நோய் இலங்கையில் உள்ள காபி தோட்டங்களில் தொடங்கியது. பின்பு, இந்தியாவில்189ல் இந்நோய் பரவியது. இது நம் நாட்டில் உள்ள காபி தோட்டங்களில், ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி மிகுந்த சேதத்தை விளைவிக்கிறது. கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.

இந்நோய் பெரும்பாலும் இலைகளைத்தான் தாக்கும். தளிர் இந்த நோயால் அதிக அளவில் தாக்கப்படுகின்றன. முதலில், இலைகளின் அடிப்பாகத்தில் துருக்கூடுகள் 1-–2 கிலோ மீட்டர் விட்டமுள்ள சிறிய புள்ளிகளாகத் தோன்றும். புள்ளிகள் முதலில் மஞ்சள் நிறமாக தோன்றி, பின்னர் விரிவடைந்து ஆரஞ்சு நிறமாக மாறும். இப்புள்ளி வழக்கு எதிராக உள்ள இலைகளின் மேற்பரப்பு, பழுப்பு நிறமாகக் காணப்படும். நோய் அதிகமாக தாக்கும் போது, இலைகள் கரிந்து, மடிந்து, உதிர்ந்துவிடும். காய்கள் சிறுத்தும், முதிர்ச்சியடையாமலும், பழுக்காமலும் உதிர்ந்து விடும்.

இந்நோய் ஹெமிலியா வாஸ்டாடிரிக்ஸ் என்னும் பூசணத்தால் ஏற்படுகிறது. இந்நோய் ஏற்படும் போது இலைகள், ஊண்வழங்கியின் திசுவறைக்கிடையே காணப்படும். இவைகளிலிருந்து தோன்றும் கோள வடிவமுள்ள உறிஞ்சும் உறுப்புகள், திசுவறைக்குள் சென்று, பூசணத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை சேகரித்து கொள்கிறது. பின்பு இலைகள் மீது மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்.

வித்துக் காம்புகளின் நுனியில் யூரிடோ வித்துகளும் தோன்றுவதால் புள்ளிகளின் மேல் ஆரஞ்சு நிறப் பொடியை தூவியதை போன்ற தோற்றத்தை அளிக்கும். யூரிடோ வித்துகள் ஆமைத்தோடு போன்ற வடிவத்தையும், 26–-40 மைக்ரான் விட்டத்தையும், 20–-30 மைக்ரான் உயரத்தையும் கொண்டதாயிருக்கும். நாளடைவில் யூரிடோ வித்துக் கூடுகளிலிருந்தே டீலியோ வித்துக்கள் தோன்றும்.

யூரிடோ வித்துகள் மூலம் நோய் தோன்றிய பரவுகிறது. காற்று, பூச்சிகள், மழைத்துளிகள் போன்றவற்றால் என் நோய் பரப்பப்படுகிறது.

அதிகமான ஈரப்பதம் விட்டு விட்டு மழை தூறல், மரங்களின் நிழல், அதிக வெப்பநிலை, பனி பெய்தல், நல்ல வெளிச்சம் ஆகிய காரணங்களால் இந்நோய் அதிகளவில் தோன்றி பரவுகிறது. ரோபஸ்டா வகை காபிச் செடிகளை விட, அரபிக் வகை காபி செடிகளை இந்நோய் அதிகளவில் சேதப்படுத்துகிறது.

காபித் தோட்டங்களில் கீழே உதிர்ந்து கிடக்கும் நோய் தாக்கிய இலைகள், காய்கள் போன்ற செடிகளின் பாகங்களை அப்புறப்படுத்தி, எரிந்து விட வேண்டும். இந்த நோய்க்கு எதிர்ப்புத் திறன் அதிகம் உள்ள S238, S395 ஆகிய வகைகளைப் பயிரிடலாம். இந்நோயைத் தடுக்க 0.5 சதவீத போர்டோக் கலவை கீழே கொடுக்கப்பட்ட காலங்களில் இலைகளில் அடிபாகம் நன்றாக நனையுமாறு, பூ விடுவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழை ஆரம்பிப்பதற்கு முன்பு மே மாதத்தில் ஒரு முறையும் பருவ மழைக்குப் பின் செப்டம்பர் மாதத்தில் ஒரு முறையும், அக்டோபர் மாதத்தில் ஒரு முறையும் தெளிக்க நோய் வராமல் தடுக்கலாம்.

மேலும் விவரம் பெற…

www.tnan.ac.in/tamil/agritech

www.indiacoffee.org

www.icar.nic.in

www.tn.horticulture.tn.gov.in/hortplantation

www.agrifarming.in/coffee cultivation brazil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *