செய்திகள்

கழிவுநீர் தேங்கிய பகுதிகளை ஆர்.எஸ். ராஜேஷ் பார்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை

Spread the love

சென்னை, நவ.10

காசிமேடு பகுதியில் கழிவுநீர் தேங்கிய பகுதிகளை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் பார்வையிட்டு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார்.

தண்டையார்பேட்டை 41-வது வட்டம் காசிமேடு பவர்குப்பத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் தெருக்களில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

அக்கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் மழைநீரால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கிய கழிவுநீர், மற்றும் குப்பை சகதிகளை பார்வையிட்டு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக சீரமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதில் ஆர்.எஸ். ஜனார்த்தனம், ஏ.கணேசன், ஆர்.வி.அருண்பிரசாத், சந்தனசிவா, மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *