சினிமா செய்திகள்

கமல்ஹாசன் தலைமையில் நடந்த சினேகன்–கன்னிகா திருமணம்

சென்னை, ஜூலை 29–


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் கவிஞர் சினேகன் – கன்னிகா தம்பதியின் திருமணம் இன்று நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருப்பவர் சினேகன். இவர் 700க்கும் மேற்பட்ட படங்களில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அதன்பிறகு நடிகர் கமல் ஹாசனால் ஈர்க்கப்பட்,டு மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர்ந்தார். தற்போது அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக இருக்கிறார்.
எளிமையாக திருமணம்
இந்நிலையில், நடிகை கன்னிகா ரவி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த சினேகன், பெற்றோர் சம்மதத்துடன் இன்று கன்னிகா ரவியை திருமணம் செய்து கொண்டுள்ளார். சென்னையில் எளிமையான முறையில் நடந்த இவரின் திருமணத்தை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் முன்நின்று நடத்தி வைத்துள்ளார்.
சீர்திருத்த முறையில் இந்தத் திருமணம் நடைபெற்ற நிலையில் இன்று இரவு 8 மணிக்கு திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது. இதில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *