செய்திகள்

எலான் மஸ்க் போட்ட லைக்: சென்னை நிறுவனத்துக்கு 7 1/2 கோடி ரூபாய் முதலீடு

சென்னை, ஜூலை 25–

உலக பணக்காரர் எலான் மஸ்க் போட்ட ஒரு லைக்கால், சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஏழரை கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது.

சென்னையில் இயங்கி வரும் “கருடா ஏரோ ஸ்பேஸ்” என்ற நிறுவனம் ட்ரோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே ட்ரோன் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் என்பவரால், கடந்த 2015 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

டுவிட்டர் பதிவு

இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள சூரியசக்தி மின் உற்பத்தி மையத்தில் உள்ள, 1 லட்சத்து 22 ஆயிரம் சோலார் பேனல்களை பராமரிக்க, தங்களது டிரோன் பயன்படுத்தப்படுவதாகவும், தங்களது டிரோன் மற்ற நிறுவன டிரோன்களைவிட குறைந்த அளவு தண்ணீரை பராமரிப்புக்கு பயன்படுத்துகிறது என்றும், அக்னீஸ்வர் ஜெயபிரகாஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு, உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் லைக் செய்துள்ளார். இதனால், அவருடைய நிறுவனத்தில் ஏழரைக் கோடி ரூபாய் முதலீடு செய்ய, லண்டனைச் சேர்ந்த நிறுவனம், முன் வந்துள்ளதாம்.

இது குறித்து ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய கருடா ஏரோஸ்பேஸ் குழுவினர், எங்கள் நிறுவன டிரோனின் சிறப்பு குறித்து நான் டுவிட்டரில் பதிவிட்டதை, எலான் மஸ்க் லைக் செய்திருந்தார். அதனால் கவரப்பட்ட லண்டன் நிறுவனம், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *