செய்திகள்

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்படுவார்

முன்னாள் அமைச்சர் கமல்நாத் பேட்டி

புதுடெல்லி, டிச. 31–

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் கமல்நாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில்,

வருகிற 2024ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி திகழ்வார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார். உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு நீண்ட தூரத்துக்கு நடைப்பயணத்தை இதுவரை யாரும் மேற்கொண்டது இல்லை. அதேபோல் இந்திய நாட்டுக்காக இவ்வளவு தியாகங்களையும் நேருவின் குடும்பத்தை தவிர வேறு யாரும் செய்ததில்லை. ஆட்சி அதிகாரத்துக்காக ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ளவில்லை. யாரை வேண்டுமானாலும் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தும் வல்லமை கொண்ட மக்களின் நலனுக்காகவே அவர் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலம் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள விருக்கிறது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்குக் கொண்டு வரப்படும். தேர்தலை முன்னிட்டு மாநில காங்கிரசில் நிர்வாக ரீதியிலான சில மாற்றங்கள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *