வாஷிங்டன், ஏப். 8–
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13.36 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 29.01 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:–
கொரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 13 கோடியே 36 லட்சத்து 95 ஆயிரத்து 421 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 29,01,124 பேர் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 10 கோடியே 78 லட்சத்து 25 ஆயிரத்து 976 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமார் 2 கோடியே 29 லட்சத்து 68 ஆயிரத்து 321 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 1 லட்சத்து 975 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரத்து 243ஐத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 5 லட்சத்து 72 ஆயிரத்து 849ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதன்கிழமை ஒரே நாளில் 75 ஆயிரத்து 183 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 873 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 கோடியே 31 லட்சத்து 97 ஆயிரத்து 31 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 973 பேருக்கு தொற்று பாதித்துள்ளது. 3 ஆயிரத்து 733 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் பாதித்தோர் மற்றும் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3 லட்சத்து 41 ஆயிரத்து 97 பேர் பலியாகியுள்ளனர்.
தொற்று பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1 கோடியே 29 லட்சத்து 26 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 66 ஆயிரத்து 892 பேர் உயிரிழந்துள்ளனர்.