செய்திகள்

உலகின் பசி போக்கும் உழவர்களுக்கு வந்தனம்

உலகின் பசி போக்கும் உழவர்கள், கால்நடைகள், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் திருநாள் தைப் பொங்கல் ஆகும்.

பூமிப்பந்தின் ஆதாரமான சூரியன் உலகின் பசி போக்கும் உழவர்கள், படைப்புக் கருவிகளாக விளங்கும் கால் நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் தைத் திருநாள். வீடுகள், மாட்டுத் தொழுவங் களுக்கு வண்ணம் தீட்டி, பச்சரிசி, புது வெல்லம், செங்கரும்பு, மஞ்சள், மாக்கோலம், புத்தாடை யுடன் பாரம்பரியம், பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகை இது. கால்நடைகளை நீராடச் செய்து பொங்கலை அவற்றிற்கு பரிவுடன் அளிப்பர். பிழைப்புக்காக திசைகள் எட்டும் சென்ற பந்தங்கள் இந்நாளில் ஒன்றுகூடி மகிழும் மஞ்சுவிரட்டு, பாரம்பரிய விளையாட்டுகள் என செயற்கைத் தனம் இல்லாத குதூகலம் தான். தை மாதம் முதல் நாள் பொங்கல் பூஜை செய்யப் படுகிறது. அன்று அதிகாலை குளித்து, தூய ஆடை அணிந்து, நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

நடு முற்றத்தில் கோலம் போட்டு, குத்து விளக்கு ஏற்றி வைத்து, குலதெய்வம் படம் இருந்தால் அதைப் பக்கத்தில் வைத்து தலை வாழை இலையை விரித்து, இடது பக்கம் நாழி நிறைய (கோபுரம் போல்) பச்சை நெல் நிறைத்து வைக்க வேண்டும். இலையில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மீது கத்தரிக்காய், அவரைக் காய், கொத்தவரங்காய், சிறிய பூசணிக்காய், கருணைக் கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக் கிழங்கு, காப்பரிசி, வெற்றிலைப்பாக்கு, பழம், கரும்பு, மஞ்சள் கிழங்கு, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை வைத்து திருவிளக்கையும், குலதெய்வத்தையும் வணங்க வேண்டும்.

ஆதித்ய ஹ்ருதயம் தெரிந்த வர்கள், அதைச் சொல்லலாம். சூரியனுக்கு உரிய பாடல்கள் பாடலாம். இவை முடிந்ததும் குத்து விளக்குக்கும், குல தெய்வத்துக்கும் எல்லாப் பொருள் களையும் நைவேத்யம் செய்து கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். சூரியனுக்கும் ஆரத்தி காட்ட வேண்டும். பின், காகத்துக்குப் பொங்கல் வைத்துவிட்டு, குழந்தை களுக்குக் கொடுக்க வேண்டும். அதன் பின் தான் மற்றவர்கள் சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *