போஸ்டர் செய்தி

கான்பூர் ஹவுராவிலிருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது: 5 பேர் காயம்

லக்னோ, ஏப். 20–

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் ஹவுராவில் இருந்து டெல்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

ஹவுராவில் இருந்து புதுடெல்லி நோக்கி செல்லும் விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் நேற்று புறப்பட்டது. இந்த ரெயில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரை இன்று அதிகாலை ஒரு மணிக்கு அடைந்தது. அப்போது ரெயிலின் 5 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. நள்ளிரவில் பயணிகள் தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் அலறினர்

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 5 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் டெல்லியிலிருந்தும் டெல்லிக்கு வரும் ரெயில்கள் தாமதமாகியுள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து அளிக்குமாறு ரெயில்வே அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய ரெயில்வே ஹவுரா – 033, 26402241, 26402242, 26402243, 26413660 என்ற முகவரிக்கு ஹெல்ப்லைன் எண்களை வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *