செய்திகள்

உக்ரைனில் உயிரியல், ரசாயன ஆயுதங்களா?: அமெரிக்கா மறுப்பு

மாஸ்கோ, மார்ச் 10–

உக்ரைனுக்கு எதிராக இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தக்கூடும் என்று,

ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எச்சரித்தது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

அமெரிக்கா மறுப்பு

இதற்கு மறுப்பு தெரிவித்த அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ரஷ்யாவின் கூற்று அபத்தமானது என்றும், உக்ரைனுக்கு எதிராக பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறது எனவும் குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னதாக, அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை அறிவித்தது. ரஷ்யாவிலிருந்து அனைத்து வகையான எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோல் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இன்று தெரிவித்தார். இதனால், அமெரிக்காவில் எண்ணெய் விலை உயர வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.