செய்திகள்

இமாசல பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து: பா.ஜ.க. தொண்டர்கள் 7 பேர் காயம்

குல்லு,மே.16–
இமாசல பிரதேசத்தில் பா.ஜ.க. தொண்டர்களை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 7 பேர் காயமடைந்தனர்.
இமாசல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் பஞ்ஜார் பகுதியில் நாக்னி கிராமத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதில் பா.ஜ.க. தொண்டர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில், பேருந்து திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *