செய்திகள்

இந்தியாவில் 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, மார்ச் 7–

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 5,476 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,362 ஆக குறைந்தது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 67 ஆயிரத்து 315 ஆக உயர்ந்தது.

இது நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட 20 சதவீதம் குறைவாகும்.கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.நேற்று ஒரு நாளில் கொரோனா தொற்றில் இருந்து 9 ஆயிரத்து 620 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரையில் இந்த தொற்றில் இருந்து குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 98 ஆயிரத்து 95 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று 158 பேர் இந்த தொற்றால் உயிரிழந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 66 ஆக குறைந்தது. இதுவரை இந்த தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 15 ஆயிரத்து 102 ஆக அதிகரித்துள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 8 லட்சத்து 30 ஆயிரத்து 892 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.